*போலீசார் தடியடி
திருமலை :ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் நடிப்பில் உலகம் முழுவதும் நேற்று வெளியான படம் ஹரிஹர வீர மல்லு. இப்படத்தின் ரசிகர்களுக்கான பிரீமியம் ஷோ அதிகாலையில் காட்சிபடுத்தப்பட்டது. அவ்வாறு ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினத்தில் உள்ள தனியார் தியேட்டரில் ஏற்பாடு செய்யப்பட்ட ரசிகர்களுக்கான பிரீமியம் ஷோவைக்கான பவன் கல்யாண் ரசிகர்கள் அதிகளவில் திரண்டனர்.
இதனால் அங்கு தள்ளுமள்ளு ஏற்பட்ட நிலையில் தகராறாக மாறி ரசிகர்கள் தியேட்டருக்குள் புகுந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் தியேட்டர் நுழைவு வாயில் கண்ணாடி உடைக்கப்பட்டது.
பிரீமியம் ஷோவுக்கு வரம்பைத் தாண்டி ரசிகர்கள் அதிக அளவில் வந்ததால், போலீசார் மற்றும் திரையரங்க நிர்வாகத்தாலும் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் அவர்களைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பவன் கல்யாண் ஆந்திர மாநில துணை முதல்வராக பதவியேற்று முதல்முறையாகவும், பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்புடன் வெளியாகியது. இவை ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post மச்சிலிப்பட்டினத்தில் ஹரிஹர வீர மல்லு படத்தின் பிரீமியம் ஷோவில் பவன் கல்யாண் ரசிகர்கள் மோதல் appeared first on Dinakaran.
