ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பள்ளியின் மேல் கூரை இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜிலாவரை அடுத்த பிப்லோடி பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் மேற் கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் இடிபாடுகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பள்ளியில் இருந்த சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
The post ராஜஸ்தானில் பள்ளியின் மேல் கூரை இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.
