இதுகுறித்து விசாரித்த போது தேர்வில் முறைகேடு நடந்தது தெரியவந்தது. இந்த முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அளித்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிந்து பலரை கைது செய்தனர். முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக 99 பேர் வாழ்நாள் தகுதியிழப்பு செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் கீழ்நிலை அதிகாரிகள், விண்ணப்பதாரர்கள், புரோக்கர்கள், பார்சல் சர்வீஸ் ஓட்டுனர்கள், காவலர்கள் மட்டுமே. உயரதிகாரிகள் யாரும் வழக்கில் சேர்க்கப்படவில்லை.
உயரதிகாரிகள் ஆதரவு இல்லாமல் இந்த மோசடி நடக்க வாய்ப்பில்லை. இதேபோல் டிஎன்பிஎஸ்சி 2016ல் நடத்திய குரூப் 1 தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்த தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்ற பலர் காவல் துறை மற்றும் நிர்வாகத்துறையில் உயர் பொறுப்புகளில் உள்ளனர். லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைக்கு டிஎன்பிஎஸ்சியை நம்பியுள்ளனர். அரசு வேலைக்கு செல்ல கடுமையாக படித்து வருகின்றனர். எனவே, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடு செய்து வெற்றி பெறுவது அரசு வேலைக்காக கடுமையாக முயன்று வரும் இளைஞர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும்.
டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளது. இதனால் சிபிசிஐடி விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றியும், எதிர்காலத்தில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க மாநிலம் முழுவதும் யூபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையங்களை கண்காணிக்க குழு அமைக்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டிஎன்பிஎஸ்சி தரப்பில், ‘‘மனுதாரரின் கோரிக்கை ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 14.12.2021 ஐகோர்ட் உத்தரவின்படி டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது’’ என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘மனுதாரரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் இந்த மனு மீது வேறு உத்தரவு பிறப்பிக்கவேண்டிய தேவையில்லை. எனவே, மனு முடித்து வைக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.
The post அதிமுக ஆட்சியின்போது நடந்த குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு சிபிஐக்கு மாற்றம்: ஐகோர்ட் கிளையில் டிஎன்பிஎஸ்சி தகவல் appeared first on Dinakaran.
