பஞ்சாபில் 6 பாக். டிரோன்கள் இடைமறித்து அழிப்பு

சண்டிகர்: பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து மற்றும் கண்காணிப்பு பகுதியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் வந்துள்ளன. இதனை பார்த்த வீரர்கள் அவற்றை இடைமறித்து செயலிழக்க செய்வதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகளை பயன்படுத்தி உள்ளனர்.

மேலும் மூன்று கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு கிலோ எடை கொண்ட ஹெராயினையும் வீரர்கள் பறிமுதல் செய்தனர். இதேபோல் நேற்று காலை அட்டாரி கிராமத்திற்கு அருகே மற்றொரு டிரோனை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் இடைமறித்துள்ளனர். இதில் இருந்து தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டர்ன் டரன் மாவட்டத்தில் உள்ள தால் கிராமத்திற்கு அருகே நடந்த மற்றொரு சம்பவத்தில் வயலில் இருந்து துப்பாக்கி சிக்கியது.

The post பஞ்சாபில் 6 பாக். டிரோன்கள் இடைமறித்து அழிப்பு appeared first on Dinakaran.

Related Stories: