அவர் கூறுகையில், ‘மசூதிக்குள் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பங்கேற்ற டிம்பிள் யாதவ் முறையாக ஆடை அணியாமல் மசூதி விதிமுறைகளை மீறி விட்டார். இது இஸ்லாமியர்களின் உணர்வை புண்படுத்துவது போன்றது. மசூதிக்குள் கட்சி கூட்டம் நடத்தியது கண்டனத்துக்குரியது. மசூதியின் இமாம் மொஹிபுல்லா நத்வி சமாஜ்வாதி உறுப்பினர் என்பதால், அவர் கூட்டத்தை நடத்த அனுமதித்துள்ளார்.
எனவே இந்த கூட்டத்தை நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஓவைசி போன்ற முஸ்லிம் பிரதிநிதிகள் எங்கே சென்றனர். அவர்கள் அமைதி காப்பது ஏன்? நாங்களும் வரும் 25-ம் தேதி தொழுகைக்குப்பின் கூட்டம் நடத்தி தேசிய கீதம் பாடுவோம். அகிலேஷ் யாதவ் மசூதிக்குள் கட்சி கூட்டம் நடத்தியது, முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்கள் எல்லாம் தன்வசம் உள்ளதாக நம்புகிறார் என தெரிகிறது’ என்றார்.
இதுகுறித்து டிம்பிள் யாதவ் கூறுகையில், ‘பாஜ மக்களை தவறாக வழிநடத்துகிறது. மசூதிக்குள் கட்சி கூட்டம் நடைபெறவில்லை. தவறாக வழிநடத்துவதுதான் பாஜவின் நோக்கம். ஆபரேஷன் சிந்தூர் உட்பட முக்கிய விஷயங்கள் குறித்து பேச பாஜ அரசு விரும்பவில்லை’ என்றார். அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘மக்களை ஒன்றிணைய விடாமல் பிரிக்கவே பாஜ விரும்புகிறது. அனைத்து மதத்தின் மீதும் எங்களுக்கு நம்பிக்கை உண்டு. பாஜவின் ஒரு ஆயுதம்தான் மதம்’ என்றார்.
The post மத உணர்வை புண்படுத்திவிட்டார் டிம்பிள் யாதவ் என்ற பாஜவின் குற்றச்சாட்டுக்கு அகிலேஷ் யாதவ் பதில் appeared first on Dinakaran.
