×

எனது தொகுதியின் கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்தவர் முதல்வர்: பாஜ எம்எல்ஏ நயினார் ஒப்புதல்

திருச்சி: பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருச்சியில் உள்ள பாஜ மாவட்ட அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்க்கு வருகை தர உள்ளார். முதல் நாள் தூத்துக்குடி விமான நிலையம் வந்து விரிவாக்க பணிகள் முடிவடைந்த நிலையில் திறந்து வைத்து ரூ.4500 கோடி திட்டங்களை திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து திருச்சியில் தங்கி மறுநாள் கங்கைகொண்ட சோழபுரம் சென்று ராஜேந்திர சோழன் கட்டிய கோவில் பார்வையிட்டு கலை கலாச்சார விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார்.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சில கட்சிகள் வர உள்ளன. தமிழக முதல்வரை பொறுத்தவரை, தனிப்பட்ட முறையில் அவர் எனக்கு நெருங்கிய நண்பர். எனது தொகுதி பொதுமக்கள் கேட்ட கோரிக்கைகளை செய்து கொடுத்த நண்பர். உடல் நலம் குணமாக இறைவனை வேண்டுகிறேன். அவர் உங்களுடன் ஸ்டாலின் கோப்புகளை பார்க்கிறார் என்றால் நலமாக இருக்கிறார் என்று அர்த்தம். குரான் மீது சத்தியமாக பாஜவுடன் கூட்டணி இல்லை என ஆதவ் அர்ஜுன் சொல்லி இருப்பது அவரது தனிப்பட்ட கருத்து. குரான், பகவத்கீதை, பைபிள் யாரும் அரசியலுக்கு பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

The post எனது தொகுதியின் கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்தவர் முதல்வர்: பாஜ எம்எல்ஏ நயினார் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Baja MLA ,Nayinar ,Trichy ,Bajaj ,President ,Nayinar Nagendran ,Bajaj district ,Modi ,Tamil Nadu ,Tutickudi Airport ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள்...