சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி சுந்தரேசனுக்கு ஆதரவாக பேசிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

சென்னை: மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி. சுந்தரேசன் இவர் தனக்கு வழங்கப்பட்ட வாகனத்தை திரும்ப பெற்றது சம்பந்தமாக மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தற்போது, டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து வருத்தம் தெரிவிக்கும் வகையில் கிண்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் செல்வம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக டிஎஸ்பி சுந்தரேசனுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டு இருந்தார். காவல்துறை நடவடிக்கைக்கு எதிராக கருத்தை பரப்பியதால் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் காவலர் செல்வம் பரங்கிமலை ஆயுதப்படை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி சுந்தரேசனுக்கு ஆதரவாக பேசிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: