×

மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் குண்டு குழிகளை சீரமைத்த போக்குவரத்து போலீசார்

 

மார்த்தாண்டம், ஜூலை 24: மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் குண்டு குழிகளை டிராபிக் போலீசார் சீரமைத்தனர். மார்த்தாண்டம் காந்தி மைதானம் முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை சாலையில் குண்டு குழிகள் ஏற்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இதனால் வாகனங்கள் விதிகளை கடைபிடிக்காமல் வலது பக்கமாக ஏறி செல்ல வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டது.

இந்த ரோட்டில் அடிக்கடி செல்லும் டவுன் பஸ்கள் பழுதுபட்டது. இந்த ரோட்டை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இதையடுத்து மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவம் அறிவுரையின் பேரில் மார்த்தாண்டம் டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் செல்லசாமி மற்றும் போலீசாரின் வேண்டுகோளை ஏற்று காண்ட்ராக்டர் ஆல்பர்ட்ராஜ் தேவையான மண் வழங்கி உதவி செய்தார்.இதனை தொடர்ந்து ட்ராபிக் சப் இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையில் குண்டு குழிகள் சீரமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் குண்டு குழிகளை சீரமைத்த போக்குவரத்து போலீசார் appeared first on Dinakaran.

Tags : Marthandam Market Road ,Marthandam ,Marthandam Gandhi Maidan ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...