×

இ.க்யூ. கோரிக்கைகளை பயணிக்கும் நாளுக்கு ஒருநாள் முன்பாகவே சமர்ப்பிக்க வேண்டும்: பயணிகளுக்கு அமைச்சகம் அறிவுறுத்தல்

சென்னை: அவசர ஒதுக்கீட்டு கோரிக்கைகளை பயணிக்கும் நாளுக்கு ஒரு நாளுக்கு முன்பாகவே சமர்ப்பிக்க வேண்டும் என ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்திய ரயில்வே அமைச்சகம் பயணிகள் ரிசர்வேஷன் முறையில் முக்கியமான மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி அவசர ஒதுக்கீட்டு (எமர்ஜென்சி கோட்டா – இ.க்யூ.) கோரிக்கைகளை பயணிக்கும் நாளுக்கு ஒரு நாளுக்கு முன்பாகவே சமர்ப்பிக்க வேண்டும்.

நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 2 மணி வரை புறப்படும் ரயில்களுக்கு இ.க்யூ. கோரிக்கைகள் முந்தைய நாளின் மதியம் 12 மணி வரை இ.க்யூ செல்லில் வந்து சேர வேண்டும். மதியம் 2.01 மணி முதல் இரவு 11.59 மணி வரை புறப்படும் ரயில்களுக்கு கோரிக்கைகள் முந்தைய நாளின் மாலை 4 மணி வரை இ.க்யூ செல்லில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பயண நாளன்று சமர்ப்பிக்கப்படும் இ.க்யூ கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.

ஞாயிறு மற்றும் பொதுவிடுமுறை நாட்களில் புறப்படும் ரயில்களுக்கு இ.க்யூ கோரிக்கைகள் முந்தைய வேலை நாளின் அலுவலக நேரத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதற்கு முன்னர், பயண அட்டவணை (சார்ட்) தயாரிக்கும் நேரத்தை நான்கு மணி நேரத்திலிருந்து எட்டு மணி நேரத்திற்கு மாற்றும் திட்டத்தையும் அறிவித்தது. பிற்பகல் 2 மணிக்கு முன் புறப்படும் ரயில்களின் பயண அட்டவணை முந்தைய நாளில் இரவு 9 மணிக்குள் முடிக்கப்படும். இது காத்திருப்பு பயணிகள் முன்னதாகவே தங்களின் நிலையை அறிந்து மாற்று ஏற்பாடுகளை செய்ய உதவுகிறது.

The post இ.க்யூ. கோரிக்கைகளை பயணிக்கும் நாளுக்கு ஒருநாள் முன்பாகவே சமர்ப்பிக்க வேண்டும்: பயணிகளுக்கு அமைச்சகம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Railway Ministry ,Indian Railways Ministry ,
× RELATED வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளி குழுமத்தில் 142 மாணவர்களின் கைப்புத்தகம் வெளியீடு