×

காவிரி குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

 

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு 30 பேர் கொண்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவை நியமித்துள்ளது. இது தமிழக டெல்டா விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இரு மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் பங்கீடு செய்ய காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கபட்டு அவை விடுத்த ஆணையை கர்நாடகா அரசு இதுவரை செயல்படுத்தாமல் தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. இந்த முயற்சியை தமிழக அரசு முறியடிக்க ஆக்கபூர்வமான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

 

Tags : Tamil Nadu government ,Mekedadu dam ,Cauvery ,G.K. Vasan ,Chennai ,TAMAGA ,president ,Karnataka government ,Tamil Nadu ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்