திமுக வழக்கறிஞர் அணியின் மாநில நிர்வாகிகள் பயிற்சிக் கூட்டம் 26ம் தேதி நடக்கிறது

சென்னை: திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக வழக்கறிஞர் அணி மாநில நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 26ம்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கூறிய பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் சென்னை, அண்ணா அறிவாலயம்,

கலைஞர் அரங்கத்தில், எனது தலைமையில், சட்டத்துறைத் தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா.விடுதலை முன்னிலையில் நடைபெறும். இக்கூட்டத்தில், மாநில நிர்வாகிகள், மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இப்பயிற்சிக் கூட்டத்தில் வருகைப் பதிவேடு வைக்கப்பட இருப்பதால் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post திமுக வழக்கறிஞர் அணியின் மாநில நிர்வாகிகள் பயிற்சிக் கூட்டம் 26ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: