இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெளிவாக தெரிவித்து விட்டார். எடப்பாடி அதுகுறித்து பேசவில்லை என்றால் அதை அவரிடம் தான் கேட்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியுடன் உள்ள கூட்டணி கட்சிகள் இணைந்த கூட்டணி மந்திரிசபை இம்முறை தமிழ்நாட்டில் அமையும். அதில் கூட்டணியில் இணைந்துள்ள அனைத்து கட்சிகளும் இடம்பெறும்.
கூட்டணியை பலப்படுத்தும் வகையில் மேலும் கட்சிகள் வரும். கொஞ்சம் பொறுத்திருங்கள். அன்வர் ராஜா, எம்ஜிஆர் காலத்தில் இருந்து கட்சியில் இருப்பவர். ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்தவர். எனது நெருங்கிய நண்பர். இருப்பினும் அவர் திமுகவில் சேர்ந்தது எனக்கு வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post அதிமுக – பாஜ கூட்டணி ஆட்சிதான்: அடித்துச் சொல்லும் டிடிவி appeared first on Dinakaran.
