- குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கம்
- ஈரோடு
- ஈரோடு மாவட்டம்
- கோபிசெட்டிப்பாளையம் தாலுகா
- கொங்கர்பாளையம் கிராமம்
- புஞ்சை
- தின மலர்

ஈரோடு: குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து 7 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், கொங்கர்பாளையம் கிராமம், குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுகரை வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் புஞ்சை பாசன நிலங்களுக்கு, சிறப்பு நனைப்பிற்கு (Special Wetting) நாளை முதல் வரும் 30ம் தேதி வரை 7 நாட்களுக்கு, 14.515 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டத்திலுள்ள கொங்கர்பாளையம், கவுண்டம்பாளையம், வாணிப்புத்தூர், அரக்கன்கோட்டை மற்றும் புஞ்சைத்துறையம்பாளையம் ஆகிய கிராமங்களிலுள்ள 2498 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
The post குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்க ஆணை! appeared first on Dinakaran.
