×

நாளை மறுதினம் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

 

தேனி, ஜூலை 23: தேனி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில், தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை மறுதினம் (25ம் தேதி) காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில், தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைகள் சம்பந்தமான திட்டங்கள் குறித்த கோரிக்கைகளை கூட்டத்தில் கலந்து கொண்டு, மாவட்ட கலெக்டரிடம் மனுக்களாக வழங்கலாம்.

விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுக்கள், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாளை மறுதினம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Theni ,Theni district administration ,District Collector ,Office ,Collector ,Ranjeet Singh… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...