×

பெண்ணை தாக்கி பொருட்களை சேதப்படுத்திய 11 பேர் மீது வழக்கு

 

கள்ளக்குறிச்சி, ஜூலை 23: கள்ளக்குறிச்சி அருகில் உள்ள தென்கீரனூர் கிராமத்தை சேர்ந்த ராகவன் மனைவி சரசு(50), இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த மதுரமுத்து மகன் இளையராஜா குடும்பத்திற்கும் நிலம் சமபந்தமாக பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரமுத்து மகன்கள் இளையராஜா, கலியபெருமாள், கண்ணன், மதுரமுத்து மகள்கள் ராணி, ராதிகா, ரஞ்சனி, மதுரமுத்து மனைவி கமலா, கணேசன் மகன்கள் ஏழுமலை, வசந்த், இளையராஜா மனைவி சத்யா, கலியபெருமாள் மனைவி பரிமளா ஆகிய 11 பேரும் ஒன்று சேர்ந்து சரசுவை தாக்கியதோடு பின்னர் மாட்டுக்கொட்டகையை பிரித்து சேதபடுத்திவிட்டனர்.

10 வாழை மரங்கள், மூன்று முருங்கை மரங்கள், 5 தென்னை மரங்கள், 5 வேப்பமரங்கள், ஒரு புளியமரம் ஆகியவற்றை பிடிங்கி சேதப்படுத்திவிட்டனர். மேலும் வீடு கட்டுவதற்கு வைக்கப்பட்டு இருந்த 5000 செங்கற்களை எடுத்து சென்றுவிட்டனர். இதனால் ரூ.5 லட்சம் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சரசு கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் விஜயராகவன் மற்றும் போலீசார் இளையராஜா உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பெண்ணை தாக்கி பொருட்களை சேதப்படுத்திய 11 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Sarasu ,Raghavan ,Thenkeeranur ,Maduramuthu ,Ilayaraja ,Dinakaran ,
× RELATED கல்லூரி மாணவி மாயம்