×

ஆகஸ்ட் 6 முதல் சென்னையில் குவான்ட்பாக்ஸ் செஸ்

சென்னை: குவான்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டிகளின் 3வது சீசன், வரும் ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளின் மொத்த பரிசுத் தொகை, ரூ. 1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. போட்டிகளில், மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் பிரிவுகளில் 20 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் கலந்து கொள்ளும் வீரர்கள், 2026ல் நடைபெறும் கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெற தேவையான ஃபிடே புள்ளிகளை பெற முடியும்.

மாஸ்டர்ஸ் பிரிவில், நெதர்லாந்து வீரர்கள் அனிஷ் கிரி, ஜோடர்ன் வான் ஃபாரஸ்ட், இந்திய முன்னணி வீரர்கள் அர்ஜுன் எரிகேசி, விதித் குஜராத்தி, நிஹால் சரின், அமெரிக்க வீரர் லியாங் அவோண்டர், ஜெர்மனியின் வின்சன்ட் கீமர், ரஷ்யாவின் விளாடிமிர் ஃபெடோசீவ் உள்ளிட்டோர் மோதுகின்றனர். மாஸ்டர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ. 25 லட்சம் பரிசு கிடைக்கும்.

The post ஆகஸ்ட் 6 முதல் சென்னையில் குவான்ட்பாக்ஸ் செஸ் appeared first on Dinakaran.

Tags : Quantbox Chess ,Chennai ,Quantbox Chennai Grand Masters Chess Tournaments ,Dinakaran ,
× RELATED ஜூனியர் மகளிர் உலக ஹாக்கி; ஸ்பெயின்...