தஞ்சை: அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் பாமநாசம் பகுதியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி; எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுக பொன்விழா கண்ட கட்சி; ஜெயலலிதா வழிநடத்திய கட்சி அதிமுக. மக்களுக்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கிய கட்சி அதிமுக. புயல், வெள்ள, மழை பாதிப்புகளை புயல் வேகத்தில் சரி செய்தது அதிமுக அரசு; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளித்தோம். அதிமுக ஆட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உயிர்களை காத்தோம்.
கொரோனா உள்ளிட்ட சோதனையான காலகட்டங்களிலும் அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. வேளாண்மைக்கான நீர் மேலாண்மையில் அதிமுக அரசு சிறந்து விளங்கியது. காவிரி டெல்டாவை பாதுகாத்த அரசு அதிமுக அரசு; காவிரி நதிநீர் உரிமையை பெற்றுத்தந்த அரசு அதிமுக அரசு. அதிமுக ஆட்சியில் 7 சட்டக் கல்லூரிகளை கொண்டு வந்தோம். அதிமுகதான் கல்விக்கு முன்னுரிமை கொடுத்த கட்சி. வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெறும் என்று கூறினார்.
The post புயல், வெள்ள பாதிப்புகளை புயல் வேகத்தில் சரி செய்தது அதிமுக அரசு: எடப்பாடி பழனிசாமி பேச்சு appeared first on Dinakaran.
