2021 முதல் தமிழ்நாடு அடைந்து வரும் வளர்ச்சிகள், சாதனைகளை எவராலும் மறைக்க முடியாது: தமிழ்நாடு அரசு

சென்னை: 2021 முதல் தமிழ்நாடு அடைந்து வரும் வளர்ச்சிகள், சாதனைகளை எவராலும் மறைக்க முடியாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தனிநபர் வருமானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு 2வது இடம் என ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் தகவல் தெரிவித்தார். புள்ளியியல்-திட்ட அமலாக்க அமைச்சக புள்ளி விவரப்படி, மக்களவையில் நிதித்துறை இணையமைச்சர் தெரிவித்தார். தனிநபர் வருமானம் தேசிய அளவில் ரூ.1,14,710ஆக உள்ள நிலையில் தமிழ்நாடு ரூ.1,96,309 உடன் 2-வது இடம் பிடித்துள்ளது. 2024-25ல் 9.69% பொருளாதார வளர்ச்சி வீதத்துடன் அதிக வளர்ச்சி பெற்று மாபெரும் சாதனையை படைத்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி பாராட்டுக்குரியது என்றும் கூறினார். தமிழ்நாடு தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருவதற்கு ஒரு சான்றே ஒன்றிய இணையமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 2021 முதல் தமிழ்நாடு அடைந்து வரும் வளர்ச்சிகள், சாதனைகளை எவராலும் மறைக்க முடியாது. ஒன்றிய அரசு புதிய திட்டம் வழங்காத நிலையிலும், நிதி தராத நிலையிலும் தமிழ்நாட்டுக்கு சிறப்பான இடம் கிடைத்துள்ளது.

முதல்வர் ஸ்டாலினின் நிர்வாக திறன், தொலைநோக்கு திட்டத்தால் தமிழ்நாடு தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருகிறது. மக்கள் நலன் காக்கும் திட்டங்களால் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம், புதிய உச்சம் என்றும் தெரிவித்துள்ளது.

 

The post 2021 முதல் தமிழ்நாடு அடைந்து வரும் வளர்ச்சிகள், சாதனைகளை எவராலும் மறைக்க முடியாது: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Related Stories: