×

பும்ரா நிச்சயம் ஆடுவார்: முகமதுசிராஜ் நம்பிக்கை

லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த சூழலில் இந்திய வீரர் முகமது சிராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:- பும்ரா 4வது டெஸ்ட்டில் விளையாடுவார். பவுலிங் காம்பினேஷனில் நிச்சயம் மாறுதல் இருக்கும். சரியான இடத்தில் பந்துவீசினால் விக்கெட்டுகள் கிடைக்கும். இதுதான் எங்களுடைய திட்டம். நான் தொடர்ந்து விளையாடுவதற்கு காரணம் கடவுள் எனக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுத்திருக்கின்றார்.

எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதே அதை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கின்றேன். நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் போது எவ்வளவு போட்டிகள் நாட்டுக்காக விளையாட முடியுமோ அவ்வளவு போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் தொடர்ந்து 2 முறை 10 ஓவர்களை வீசி இருக்கின்றார். அவருக்கு எனது பாராட்டுக்கள்.

நான் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 29 பந்துகளை எதிர் கொண்டேன். அப்போது எனக்கு நல்ல நம்பிக்கை இருந்தது. நிச்சயமாக நான் அவுட் ஆக மாட்டேன் என்று நினைத்தேன். ஒவ்வொரு பந்தும் பேட்டின் நடுவில் பட்டது. நான் ஆட்டம் இழக்காமல் இருந்தால் நிச்சயம் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். லார்ட்ஸ் டெஸ்ட்டில் 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதுமனவலியை தந்தது. இவ்வாறு அவர் கூறினார். தற்போது 3 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள சிராஜ் நடப்பு தொடரில் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

The post பும்ரா நிச்சயம் ஆடுவார்: முகமதுசிராஜ் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Bumrah ,Mohammed Siraj ,London ,India ,England ,Manchester ,Dinakaran ,
× RELATED ஜூனியர் மகளிர் உலக ஹாக்கி; ஸ்பெயின்...