×

மழை காரணமாக தக்காளியின் வரத்து குறைந்து விலை உயர்வு: மக்கள் வேதனை

சென்னை: மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால், தக்காளி விலை ஒரே நாளில் 15 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்தநிலையில் தற்போது கடந்த 1 வாரத்திற்கு மேலாக பருவமழை பெய்ததால் தோட்டத்தில் மழைநீர் தேங்கி, பழங்கள் அழுகின.

இதனால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதன் காரணமாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி நேற்று மார்க்கெட்டில் 15 கிலோ எடை கொண்ட ஒரு கிரேடு தக்காளி ரூ.450-க்கு விற்பனையானது. வெளி மார்க்கெட்டில் ரகத்திற்கு ஏற்ப ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனையானது.

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடந்த ஒரு வார காலமாக குறைந்து இருந்த நிலையில், ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், ஒரே நாளில் தக்காளி விலை 15 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன்படி ஒரு கிலோ தக்காளி 35 ரூபாய்க்கும், நவீன் தக்காளி 1 கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், சில்லறை விற்பனை கடைகளில் 1 கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மழை காரணமாக திடீரென வரத்து குறைந்ததால் தக்காளியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இனி வரும் வாரங்களில் தக்காளியின் விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post மழை காரணமாக தக்காளியின் வரத்து குறைந்து விலை உயர்வு: மக்கள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை