நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 610 காசாக நீடித்து வந்தது. இந்நிலையில், நேற்று நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணயக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் என்இசிசி நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ் முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தினார். இதைத்தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 615 காசுளாக நிர்ணயம் செய்யப்பட்டது. நாமக்கல் மண்டல கோழிப்பண்ணை வரலாற்றில் இதுவே அதிகபட்ச விலை ஆகும். வழக்கமாக கார்த்திகை மாதத்தில் சபரிமலைக்கு பக்தர்கள் அதிக அளவில் செல்வதால், முட்டையின் நுகர்வு குறைந்து விலை குறைக்கப்படும். ஆனால் நடப்பாண்டு முட்டை உற்பத்தி குறைந்ததன் காரணமாக, கார்த்திகை மாதத்தில் இரண்டு முறை முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
