கடந்த 5 ஆண்டுகளில் சர்க்கரை நோயைவிட இதய நோய்க்கான மருந்துகள் விற்பனை 50 சதவீதம் அதிகரிப்பு!

மும்பை: இந்தியாவில் இதய நோயால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்நோய்க்கான மருந்துகள் விற்பனை 5 ஆண்டுகளில் 50% அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தற்போது இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் கூட மாரடைப்பு போன்ற இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதேபோல் இளம் வயதில் இதய நோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனை உறுதி செய்வது போல் கடந்த 5 ஆண்டுகளில் இதய நோய் சிகிச்சைக்கான மருந்துகள் விற்பனை 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

கொழுப்பு செரிமான குழாயில் சிக்கல், தொற்று அல்லது சர்க்கரை நோய்களுக்கான மருந்துகள் விற்பனையை விட, கடந்த 5 ஆண்டுகளில் இதய நோய் சிகிச்சைகளுக்கான மருந்துகள் விற்பனை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் இதயம் சம்​பந்​தப்​பட்ட நோய்​களுக்​கான மருந்​துகளை ரூ.1,761 கோடிக்கு விற்கப்பட்ட நிலையில், கடந்த 2025-ம் ஆண்​டில் ரூ.2,645 கோடிக்கு    மருந்​துகள் விற்​பனை​யாகி உள்​ளன.

இந்த புள்​ளி​  விவரத்​தின்​படி இதயம் சம்​பந்​தப்​பட்ட சிகிச்​சைக்​கான மருந்​துகள் விற்பனை ஆண்​டு​தோறும் சராசரி​யாக 10.7 சதவீதம் அதி​கரித்து வந்​துள்​ளன.நாட்​டில் ஏற்​படும் 63 சதவீத உயி​ரிழப்​பு​கள் எளி​தில் தொற்றா நோய்​களால் ஏற்​படு​கின்​றன. அதில் 27 சதவீதம் பேர் இதயம் சம்​பந்​தப்​பட்ட நோய்​களால்            இறக்​கின்​றனர்​ என்​று ஆய்வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

The post கடந்த 5 ஆண்டுகளில் சர்க்கரை நோயைவிட இதய நோய்க்கான மருந்துகள் விற்பனை 50 சதவீதம் அதிகரிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: