தெலங்கானாவில் நகைக் கடையில் கொள்ளை: 18 கிலோ தங்கத்தை அள்ளிச் சென்ற கும்பல்

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை நகரத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ng சாலையில் கிஷோர் என்பவர் நகைகடை நடத்திவருகிறார்.சனிக்கிழமை இரவு வழக்கம்போல நகைக்கடையை மூடிவிட்டு சென்று உள்ளார் காலையில் கிஷோர் கடையை திறக்க சென்றபோது கடை முழுவதும் தூசியில் நிறைந்தும் நகைகள் வைக்கப்பட்ட ஸ்ட்ரோங் ரூமின் சுவரில் ஒரு துளையிடப்படும் இருந்துஉள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிஷோர் நகைகள் இருந்த ஸ்ட்ரோங் ரூமுக்குள் சென்று பார்த்த பொது அங்கே வைக்கப்பட்டிருந்த 18 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கொள்ளை போன தங்கத்தின் மதிப்பு சுமார் 17 கோடி ரூபாய் என கூறபடுகிறது cctv காட்சிகளை பார்க்க சென்றபொது cctv கேமராக்கள் உடைந்து இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

கொள்ளை சம்பவம் தொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தடயவியல் குழு மற்றும் மோப்ப நாய் கொண்டு தடயங்களை சேகரித்தனர் வழக்கு பதிவுசெய்து சூர்யா பேட்டை டிஸ்பி பிரசன்னா குமார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இரவில் வந்த கொள்ளையர்கள் நகைகடை பின்புற கழிவறை சுவரில் ஒரு துளை இட்டு உள்ளே சென்று உள்ளன.

பின்னர் கேஸ் கட்டர் உதவியோடு ஷட்டர்ரை வெட்டி உள்ளேநுழைந்து லாக்கரை கேஸ் கட்டர் மூலமாக உடைத்து திறந்து தங்கத்தை மட்டும் அவர்கள் திருடி சென்றுஉள்ளனர். சுற்று பகுதியில் உள்ள cctv கேமராக்கள் ஆய்வுசெய்து ஆதாரங்களை போலீசார் தேடிவருகின்றனர் நகைகடையின் அருகில் நிறுவப்பட்ட cctv கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post தெலங்கானாவில் நகைக் கடையில் கொள்ளை: 18 கிலோ தங்கத்தை அள்ளிச் சென்ற கும்பல் appeared first on Dinakaran.

Related Stories: