×

எட்டயபுரம் அருகே பீக்கிலிபட்டியில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு

தூத்துக்குடி, ஜூலை 22: எட்டயபுரம் அருகேயுள்ள பீக்கிலிபட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்துள்ள கிராம மக்கள் இதுகுறித்த கோரிக்கை மனுவை தூத்துக்குடி கலெக்டரிடம் அளித்தனர். மனு விவரம்: எங்கள் கிராமப் பகுதியில் புதிதாக மதுக்கடை அமைத்தால் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மதுக்கடை அமைக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே தேசிய பிற்படுத்தப்பட்டோர் சங்க மாநில அமைப்பு செயலாளர் காளியப்பன் தலைமையில் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கருங்குளம் ஒன்றியம் 1வது வார்டு யாதவர் தெருவில் நீண்ட காலமாக குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது. எப்போதாவது தண்ணீர் வரும் நேரத்திலும் சமூக விரோதிகள் குடிநீர் குழாயை உடைத்து விடுகின்றனர். எனவே, அதிகாரிகள் தலையிட்டு எங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தி உள்ளனர். இதே போல் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட செயலாளர் அருமைராஜ் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.
மனுவில் கயத்தாறு பேரூராட்சியில் குடிநீர் இணைப்பு மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

The post எட்டயபுரம் அருகே பீக்கிலிபட்டியில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tasmak ,Peakilibar ,Etayapuram ,Thoothukudi ,Beikilipatti ,Tuthukudi Collector ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...