×

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உறுப்பினர் நியமன பதவி

தூத்துக்குடி, ஜூலை 22: தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
1998ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1998) தமிழ்நாடு சட்டம் 30/2025-60ஜி மூலம் திருத்தப்பட்டவாறான பிரிவு 37(1)ன் படி மாற்றுத்திறனாளி நபர்களிடம் இருந்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மன்றங்களில் உறுப்பினராக நியமனம் செய்யப்படுவதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 1 முதல் 17ம் தேதி வரை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

இதனிடையே, மாற்றுத்திறனாளி நபர்களிடம் இருந்தும் அவர்கள் தொடர்புடைய பொது நல சங்கங்களிடம் இருந்தும் விண்ணப்பம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாளை மேலும் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று மனுக்களை வழங்குவதற்கான தேதி ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே அதன்படி பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் வசித்து வரும் தகுதியான மாற்றுத்திறனாளிகள், ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கைகளின் படி தொடர்புடைய பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆணையாளரிடம் இம்மாதம் 31ம் தேதி மாலை 3 மணி வரை விண்ணப்பங்களை வழங்கலாம்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உறுப்பினர் நியமன பதவி appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Collector ,Ilam Bhagwat ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...