- அசுபதி நட்சத்திர வழிபாடு
- திருவிடைமருதூர் திருமூலர் கோவில்
- திருவிடைமருதூர்
- திருவிடைமருதூர் நாயனார்
- திருமந்திரம்
- 69 சாத்தனூர்
திருவிடைமருதூர், ஜூலை 22: திருவிடைமருதூர் திருமூலர் கோவிலில் அசுபதி நட்சத்திர வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம். திருவிடைமருதூர் அருகே உள்ள 69 சாத்தனூரில் உள்ள பிரசித்தி பெற்ற திருமந்திரம் அருளிய திருமூல நாயனார் அவதாரத் தலமாகிய திருமூலர் கோயில் ஆடி மாத அசுபதி நட்சத்திர சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு திருமூலருக்கு மஞ்சள்,திரவியம் தேன்,பஞ்சாமிர்தம்,பால்,தயிர் சந்தனம் என பதினாறு வகையான வாசனா திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. திருபுவனம் உதயகுமார் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவரும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருமூலர் வழிபாட்டுக்குழு சந்திரசேகரன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
The post திருவிடைமருதூர் திருமூலர் கோயிலில் அசுபதி நட்சத்திர வழிபாடு appeared first on Dinakaran.
