×

தஞ்சை மாவட்டத்தில் மாநில அளவிலான ரோல்பால் போட்டி: சிறப்பாக விளையாடிய 12 பேர் தேசிய போட்டிக்கு தகுதி

தஞ்சாவூர், ஜூலை 22: தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான ரோல்பால் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் 11 வயதுக்குட்பட்ட பிரிவில் மாநில அளவிலான ரோல்பால் விளையாட்டு போட்டியில் ஆண்கள் பிரிவில் செங்கப்பட்டு அணியும், பெண்கள் பிரிவில் கோவை மாவட்ட அணியும் முதலிடம் பெற்றது. ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல்பால் அசோஷியேசன் சார்பில், 12 -வது மாநில அளவிலான ரோல்பால் சாம்பியன்ஷீப் போட்டிகள், தஞ்சாவூரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்த போட்டியில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திண்டுக்கல் என 25 மாவட்டங்களிலிருந்து விளையாட்டு வீரர், வீராங்கணைகள் பங்கேற்றனர். இந்த போட்டிகள் மாவட்டம் வாரியாக நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டிகள் நேற்று நிறைவு பெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் செங்கல்பட்டு அணி முதலிடமும், காஞ்சிபுரம் அணி இரண்டாமிடமும், திண்டுக்கல் அணி மூன்றாமிடமும் பிடித்தன. அதே போல் பெண்கள் பிரில் கோவை முதலிடமும், திண்டுக்கல் இரண்டாமிடமும், தஞ்சாவூர் மூன்றாமிடமும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ்கள், கோப்பைகள் ஆகியவை வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை ரோல்பால் விளையாட்டின் தென்னிந்திய செயலாளர் எம்.பி.சுப்பிரமணியம், ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல்பால் அசோஷியேசன் செயலாளர் சி.கோவிந்தராஜ் ஆகியோர் வழங்கினர்.

இதையடுத்து இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய 12 பேர் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெறவுள்ளனர்.

The post தஞ்சை மாவட்டத்தில் மாநில அளவிலான ரோல்பால் போட்டி: சிறப்பாக விளையாடிய 12 பேர் தேசிய போட்டிக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : -level rollball ,Thanjavur district ,Thanjavur ,Thanjavur Annai Sathya Sports Hall ,level ,Thanjavur Annai Sathya Sports Ground… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...