×

கல்வி வளர்ச்சி நாள் விழா’ முளகுமூடு புனித ஜோசப் பள்ளி

 

தக்கலை, ஜூலை 22: முளகுமூடு புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காமராஜரின் 123வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. தொடர்ந்து கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.
கல்விக் குழுவின் சார்பாக ஆசிரியர் லாசர் கலந்து கொண்டு காமராஜரை பற்றி சிறப்புரை ஆற்றினார். தாளாளர் அருட்தந்தை கில்பர்ட் லிங்சன் உரையாற்றினார். மேலும் பங்கு பேரவை துணைத் தலைவர் மரிய ஜான் வரதராஜ், பள்ளி முதல்வர் அருட்சகோதரி மோழி ஜோசப், அருட்தந்தை ராபின்சன் கலந்து கொண்டு காமராஜரை பற்றி உரையாற்றினர்.காமராஜரின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

The post கல்வி வளர்ச்சி நாள் விழா’ முளகுமூடு புனித ஜோசப் பள்ளி appeared first on Dinakaran.

Tags : Educational Development Day Festival ,St Joseph's School ,Sprout ,Takala ,Kamaraj ,Sprout St. Joseph Metric High School ,Day of Educational Development ,Academic Committee ,Teacher ,Lazarus ,Educational Development Day Festival' ,Sprout St. ,Joseph's ,School ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...