×

களியக்காவிளை அருகே இளம்பெண் மாயம்

 

மார்த்தாண்டம், ஜூலை 22: கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவருக்கு செய்யது அலி (22) என்ற மகனும், ஆசனா பீவி (21) என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் தாய் இறந்து விட்டதாலும், தந்தை நோய்வாய் பட்டதாலும் ஆசனா பீவி களியக்காவிளை அருகே ஒற்றாமரத்தில் உள்ள தனது தாய் வழி பாட்டி வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற ஆசனா பீவி, பின்னர் வீடு திரும்பவில்லை.
அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து செய்யது அலி களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஆசனா பீவியை தேடி வருகின்றனர்.

The post களியக்காவிளை அருகே இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Kaliyakavilai ,Marthandam ,Sakul Amitu ,Neyyarrinkarai ,Kerala ,Seyithu Ali ,Asana Beevi ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...