×

பத்மநாபபுரம் நகராட்சியில் தூய்மை பணியின் போது கிடைத்த நகை போலீசில் ஒப்படைப்பு பணியாளருக்கு பாராட்டு

 

தக்கலை,ஜூலை 22: பத்மநாபபுரம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணிபுரிந்து வரும் பரமேஸ்வரி என்பவர் தக்கலை மேட்டுக்கடை பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கீழே 3 1/2 பவுன் தங்க நகை கிடந்தது.
அதை பரமேஸ்வரி எடுத்து தக்கலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த நகை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தினை பத்மநாபபுரம் நகர்மன்ற தலைவர் அருள் சோபன் பாராட்டி பரமேஸ்வரிக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கினார். அப்போது நகராட்சி ஆணையாளர் முனியப்பன், நகர் மன்ற உறுப்பினர்கள், சுகாதார மேற்பார்வையாளர் உடன் இருந்தனர்.

The post பத்மநாபபுரம் நகராட்சியில் தூய்மை பணியின் போது கிடைத்த நகை போலீசில் ஒப்படைப்பு பணியாளருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Padmanabhapuram Municipality ,Thakkalai ,Parameswari ,Mettukada ,Thakkalai… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...