கூடலூர், ஜூலை 22: தேனி மாவட்டம் கூடலூர் நகரில் இருந்து குமுளி செல்லும் புறவழிச் சாலை சந்திப்பில் மந்தைவாய்க்கால் அருகே பாலத்தின் மீது போடப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பக்கமாக விரிசல் ஏற்பட்டு வருகிறது. பாலத்தின் கீழே வாய்க்கால் செல்வதால் விரிசல் அதிகமாகி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறையினர் உடனே அதை கவனித்து சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
The post கூடலூர்-குமுளி சாலையில் விரிசல் appeared first on Dinakaran.
