×

புழல் சிறையில் போதைப்பொருள் விழிப்புணர்வு சிறப்புத்திட்ட தொடக்க விழா

 

திருவள்ளூர், ஜூலை 22: தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை மற்றும் பிஆர்ஐஎஸ்எம் அமைப்பின் சார்பில், போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் பற்றிய தொடர் விழிப்புணர்வு சிறப்புச்செயல் திட்ட தொடக்க விழா புழல், மத்திய சிறையில் நடைப்பெற்றது. தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதியரசரும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல் தலைவருமான நீதிபதி சுப்பிரமணியன் தொடக்க உரையாற்றினார். சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுமான இளந்திரையன், செந்தில்குமார், பிரகாஷ், சிறைத்துறை தலைமை இயக்குனர் மகேஷ்வர் தயாள், மூத்த வழக்கறிஞர் ரவிக்குமார் பால் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். முடிவில் திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜே.ஜூலியட் புஷ்பா நன்றி கூறினார். இதில், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்ட நீதித்துறையைச் சேர்ந்த நீதிபதிகள், சிறைத்துறை அதிகாரிகள், உள்ளிருப்பு சிறைவாசிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post புழல் சிறையில் போதைப்பொருள் விழிப்புணர்வு சிறப்புத்திட்ட தொடக்க விழா appeared first on Dinakaran.

Tags : Drug Awareness Special Programme Launch Ceremony ,Puzhal Prison ,Tiruvallur ,Tamil Nadu State Legal Services Commission ,Prisons and Corrections Department ,PRISM ,Puzhal, Central Prison… ,
× RELATED மாவட்டம் முழுவதும் மழையால் சேதமான சாலைகள் சீரமைப்பு