×

காவலரை தாக்கிய 2 பேர் கைது

 

புழல், ஜூலை 22: சோழவரம் குற்றப்பிரிவு காவலர்கள் பிரித்திவிராஜ் (35) மற்றும் சீனிவாசன் (30) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு செங்குன்றம் அடுத்த நாகாத்தம்மன் நகர் பகுதியில் ரோந்து சென்றபோது ஆட்டோவில் இருந்து இறங்கி வந்த 2 போதை ஆசாமிகளிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அப்போது இருவரும் சேர்ந்து பிரித்திவிராஜை சரமரியாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
உடனே 2 பேரையும் பிடித்து சோழவரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவர்கள் அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முனியசாமி (34), சசிகுமார் (20) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

The post காவலரை தாக்கிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Cholavaram ,Crime ,Prithviraj ,Srinivasan ,Nagathamman Nagar ,Sengunram ,Dinakaran ,
× RELATED மாவட்டம் முழுவதும் மழையால் சேதமான சாலைகள் சீரமைப்பு