×

முளைக்கட்டிய வெந்தய ஊத்தப்பம்

தேவையானவை:

முளைக்கட்டிய வெந்தயம் – ½ கப்,
துருவிய கேரட், காலி ஃபிளவர், கோஸ் சேர்த்து – 1 கப்,
வெங்காயம் – 500 கிராம்,
இட்லி மிளகாய் தூள் – 6 ஸ்பூன்,
உப்பு – சுவைக்கு,
தோசை மாவு – ½ கிலோ,
எண்ணெய் – 100 கிராம்.

செய்முறை:

தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி அதில் முளைக்கட்டிய வெந்தயம், துருவிய காய்கறி கலவை, இட்லி மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, தோசை மாவை கணமாக வார்த்து இந்தக் கலவையை தூவி, மூடி போட்டு ஒரு பக்கம் வெந்தவுடன் நிதானமாய் திருப்பி பொன்னிறமாய் எடுக்கவும். சுவையான ஊத்தப்பம் தயார்.

 

The post முளைக்கட்டிய வெந்தய ஊத்தப்பம் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED சோயா பீன்ஸ் பிரை