×

ஆடிப்பால் (ஆடிப்பிறப்பு)

தேவையானவை:

தேங்காய் – 1,
பச்சரிசி – 1 டீஸ்பூன்,
வெல்லம் – ½ கப்,
ஏலத்தூள் – ¼ டீஸ்பூன்,
நெய்யில் வறுத்த முந்திரி – 2 டீஸ்பூன்.

செய்முறை:

தேங்காயை துருவி, சிறிது வெந்நீர் சேர்த்து, பச்சரிசி சேர்த்து மிக்ஸியில் அரைத்துப் பாலெடுக்கவும். மூன்று முறை நீர் சேர்த்து அரைத்து பால் எடுக்கவும். அடுப்பில் பாத்திரம் வைத்து நீர் விட்டு வெல்லம் போட்டு கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் வெல்லக் கரைசலை அடுப்பில் வைத்து தேங்காய்ப்பால், ஏலப்பொடி சேர்த்து கலந்து லேசாக நுரைத்து வரும் போது இறக்கி வறுத்த முந்திரி சேர்த்து போடவும்.

The post ஆடிப்பால் (ஆடிப்பிறப்பு) appeared first on Dinakaran.

Tags : Adipal ,
× RELATED சோயா பீன்ஸ் பிரை