தண்டராம்பட்டு தண்டராம்பட்டு அருகே மான் கறியை வாங்கி சமைத்தவருக்கு வனத்துறையினர் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். சாத்தனூர் வனப்பகுதியில் மானை வேட்டையாடி இறைச்சி விற்கப்படுவதாக திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் சுதாகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சாத்தனூர் வன அலுவலர் ரவி, வனவர் குமார் தலைமையில் வனத்துறையினர் குப்பந்தாங்கல் உச்சிமலை குப்பம் பீட் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, குப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்த ரமேஷ்(44) என்பவர் மான் கறியை சமைப்பது தெரியவந்தது. விசாரணையில், வனப்பகுதியில் மானை வேட்டையாடிய நபர்களிடம் இருந்து 2 கிலோ கறியை வாங்கி சமைப்பது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர், அவரிடம் இருந்து 2 கிலோ மான் கறியை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து ரமேஷூக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வசூலித்தனர்.
The post தண்டராம்பட்டு அருகே மான் கறி சமைத்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.
