போஸ்டர் ஒட்டிய இருதரப்பினர் மீது வழக்கு திருப்பரங்குன்றம் சம்பவம்

வந்தவாசி, டிச. 9: திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அரசை கண்டித்து போராட்டம் என இந்து முன்னணி சார்பில் நேற்று வந்தவாசி டவுன், சன்னதி தெரு, தேரடி பழைய பஸ் நிலையம், காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டது. அதன் அருகே அமைதி நிலவும் தமிழ்நாட்டில் முருகர் பெயரில் மத வெறியா? மதவெறி கும்பலை விரட்ட போராடுவோம் வெல்வோம் என மற்றொரு தரப்பினர் போஸ்டர் ஒட்டி இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து இருதரப்பு போஸ்டர்களையும் போலீசார் அப்புறப்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் நோக்கில் போஸ்டர் ஒட்டியதாக இருதரப்பினர் மீதும் வந்தவாசி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: