- ட்ரைசெண்டூர் பிராந்திய செஸ் போட்டி
- ஆறுமுகநேரி
- சகுபுரம் கமலாவதி செகண்டரி பள்ளி
- திருச்செந்தூர்
- பாரதியார் தினம்
- தமிழ்ப் பள்ளி கல்வித்
- தின மலர்
ஆறுமுகநேரி, ஜூலை 21: சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் திருச்செந்தூர் வட்டார அளவில் நடந்த சதுரங்கப் போட்டியில் 22 பள்ளிகளைச் சேர்ந்த 120 மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் வட்டார அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான சதுரங்க போட்டியை சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் நடத்தியது. இதில் திருச்செந்தூர் வட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் 22 பள்ளிகளில் இருந்து சுமார் 120 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து போட்டியில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. பள்ளி ஆலோசகர் உஷாகணேஷ் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக அதிகாரி மதன், பள்ளி முதல்வர் ஸ்டீபன் பாலாசிர், துணை முதல்வர் சுப்புரத்தினா முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வித் துறை ஆய்வாளர் டாக்டர் கண்ணதாசன், போட்டிகளில் வெற்றிபெற்ற அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டிப் பேசினார்.
இப்போட்டியில் முதல் மற்றும் 2வது இடங்களை பெற்ற மாணவ- மாணவிகள் தூத்துக்குடி மாவட்ட அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை கமலாவதி பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் செல்வம் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர்கள் மணிகண்டன், அழகுகார்த்திக் சங்கர், பாலகிருஷ்ணன், மனோ, ஹரிகணேஷ் செய்திருந்தனர்.
The post திருச்செந்தூர் வட்டார செஸ் போட்டி appeared first on Dinakaran.
