×

அழகு மயில் ஆட… புதுப்பட்டினம் கடற்கரையை சுத்தம் செய்து விழிப்புணர்வு

தஞ்சாவூர், ஜீலை 21: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே புதுப்பட்டினம் கடற்கரையில் மாணவர்கள், வனத்துறை அலுவலர்கள் இணைந்து கடற்கரையை சுத்தம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொதுமக்களுடன் இணைந்து உறுதி மொழியும் ஏற்றனர். பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த புதுப்பட்டினம் கடற்கரையில் மாணவர்கள், வனத்துறை அலுவலர்கள், கடலோர பாதுகாப்பு குழும காவலர்கள் இணைந்து கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். முதலில் கடற்கரையில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் பைகளை அகற்றிய மாணவர்கள் முழுமையாக கடற்கரையையும் சுத்தம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களுடன் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழியும் ஏற்றனர்.

The post அழகு மயில் ஆட… புதுப்பட்டினம் கடற்கரையை சுத்தம் செய்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Pudupattinam ,Thanjavur ,Pudupattinam beach ,Pattukottai ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...