×

கூடலூர் பகுதிக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி நியமிக்க வலியுறுத்தல்

கூடலூர், ஜூலை 21: கூடலூர் பகுதிக்கு தனி உணவு பாதுகாப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழ்நாட்டில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உணவு பாதுகாப்புத்துறையை நிர்வகிக்கிறது. இந்தத் துறையின் முக்கிய நோக்கம் தயாரிக்கப்படும் மற்றும் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதாகும்.

இதன் மூலம் நுகர்வோரின் உரிமைகளை பாதுகாப்பதோடு, தவறான மற்றும் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது மூலம் மக்கள் நலன் பாதுகாக்கப்படுகிறது.தேனி மாவட்டம் கம்பம் வட்டார உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியாக இருந்தவர் கூடலூர் பகுதியையும் கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில் அவர் பணி மாறுதல் பெற்று சென்ற நிலையில், அந்த இடத்திற்கு புதிய அதிகாரி நியமிக்கப்படாமல் உள்ளது.

இதனால் ஹோட்டல்கள், கடைகளில் நெகிழி பயன்பாடு அதிகரித்து வருகிறது. மேலும் காலாவதியான உணவுப் பொருட்கள், செயற்கை நிறமூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என கண்காணிக்க முடியாத நிலை உள்ளது. எனவே உடனடியாக காலியாக உள்ள பணியிடத்திற்கு அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும் எனவும், ஹோட்டல்கள், கடைகளை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post கூடலூர் பகுதிக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி நியமிக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Gudalur ,Food and Consumer Protection Department ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...