தேனி, ஜூலை 21: தேனி அருகே வீட்டில் வைத்திருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரூபாய் திருடு போனது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி அருகே டொம்புச்சேரியில் உள்ள பழனிசெட்டிபட்டி காலனியில் குடியிருப்பவர் நாகலிங்கம் (48). லாரி டிரைவர். உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி, தனது மருத்துவ செலவிற்காக ரூ.2 லட்சத்தை வீட்டில் உள்ள ஒரு அறையில் பித்தளை பானையில் வைத்திருந்தார்.
நேற்று முன்தினம் சிகிச்சைக்கு செல்வதற்காக வைத்திருந்த பணத்தை பார்த்த போது, பானையில் பணம் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் பீரோவில் வைத்திருந்த ஏழு பவுன் தங்க நகைகளும் காணாமல் போயிருந்தது. இது குறித்து வீரபாண்டி போலீசில் அவர் புகார் அளித்தார். இதன்பேரில் வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தேனி அருகே வீட்டில் இருந்த ரூ.2 லட்சம், 7 பவுன் நகை மாயம் appeared first on Dinakaran.
