- சிவகங்கை மாவட்டம்
- சமாஜ்வாடி
- சிவகங்கை
- Sivaprasad
- ஆசிஷ்ரவத்
- சிவகங்கை எஸ்.பி
- மடபுரம்
- அஜித் குமார்
- தின மலர்
சிவகங்கை, ஜூலை 21: சிவகங்கை மாவட்ட புதிய எஸ்பியாக சிவபிரசாத் பொறுப்பேற்றுக்கொண்டார்.
சிவகங்கை எஸ்பியாக ஆசிஷ்ராவத் கடந்த ஜனவரி முதல் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையின் போது இறந்த பிரச்னையில் ஜூலை 1ம் தேதி எஸ்பி ஆசிஷ்ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
ராமநாதபுரம் எஸ்பி சந்தீஸ், சிவகங்கை மாவட்ட எஸ்பி பணியை கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில் தேனி எஸ்பியாக இருந்த சிவபிரசாத் சிவகங்கை எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று அவர் சிவகங்கை எஸ்பி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
The post சிவகங்கை மாவட்ட புதிய எஸ்பி பொறுப்பேற்பு appeared first on Dinakaran.
