- இளைஞர் மன்றம்
- திருப்புத்தூர் நூலகம்
- திருப்புத்தூர்
- மன்றம்
- திருப்புத்தூர் அண்ணா முழுநேர கிளை ந
- காமராஜ்
- எழுத்தாளர் சங்கம்
- ஜனாதிபதி
- பழனியப்பன்
- வாசகர் வட்டம்
- ஜெயச்சந்திரன்
திருப்புத்தூர், ஜூலை 21: திருப்புத்தூர் அண்ணா முழு நேர கிளை நூலகத்தில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு \”இளையோர் பேச்சரங்கம்\” நடைபெற்றது. எழுத்தாளர் கூட்டமைப்பு தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். கிளை நூலகர் மகாலிங்க ஜெயகாந்தன் வரவேற்றார். விழாவில் எழுத்தாளர் ஞான பண்டிதன் எழுதிய \”சிங்கத்தின் குகையில் விருந்து\” எனும் நூலை, எழுத்தாளர் ஜோல்னா ஜவகர் அறிமுகம் செய்து வைத்தார்.
சிவகங்கை வாசகர் வட்ட தலைவர் அன்புத்துரை நூலாசிரியரை அறிமுகம் செய்து வைத்தார். நூலாசிரியர் ஞானவண்டிதன் ஏற்புரை வழங்கினார். வைகை பாரதி, வாஹித், பேராசிரியர் சாம்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஏற்பாடுகளை நூலக உதவியாளர்கள் நாராயணன், ராமகிருஷ்ணன் செய்திருந்தனர். நூலக உதவியாளர் குணசேகரன் நன்றி கூறினார்.
The post திருப்புத்தூர் நூலகத்தில் இளையோர் பேச்சரங்கம் appeared first on Dinakaran.
