×

திருப்புத்தூரில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

திருப்புத்தூர், ஜூலை 21: திருப்புத்தூரில் மன்னர் அழகுமுத்து கோனின் 268வது குருபூஜை விழாவை முன்னிட்டு வீர யாதவ சமுதாய அறக்கட்டளையினர் சார்பில் நேற்று இரட்டை மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில், பெரிய மாடு பிரிவில் 11 ஜோடிகளும், சின்ன மாடு பிரிவில் 21 ஜோடிகளும் பங்கேற்றன. இதில் பெரிய மாடுகளுக்கு 8 மைல் தூரமும், சின்ன மாடுகளுக்கு 6 மைல் தூரமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இப்போட்டி திருப்புத்தூர்-மதுரை ரோட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மொத்தம் 32 ஜோடிகள் பங்கேற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டிற்கு வேட்டி, துண்டு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு, மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

The post திருப்புத்தூரில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் appeared first on Dinakaran.

Tags : Tiruputhur ,268th Guru Puja festival of ,King Azhagumuthu Kon ,Veera Yadava Community Trust ,Double bullock cart race ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...