×

இரணியல் அருகே பைக் மோதி மரப்பட்டறை அதிபர் காயம்

 

திங்கள்சந்தை, ஜூலை 21: இரணியல் அருகே நுள்ளிவிளையை சேர்ந்தவர் சேகர் (55). இவர் சொந்தமாக மரப்பட்டறை வைத்து உள்ளார். சம்பவத்தன்று கடைக்கு செல்வதற்காக நுள்ளிவிளை சகாய மாதா குருசடி அருகே மாநில நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது தோட்டியோட்டில் இருந்து வேகமாக வந்த பைக் எதிர்பாராத விதமாக சேகர் மீது மோதியது.

இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு களியங்காட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து சேகர் கொடுத்த புகாரின் பேரில் பைக்கை வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கிறிஸ்டோபர் (38) என்பவர் மீது இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இரணியல் அருகே பைக் மோதி மரப்பட்டறை அதிபர் காயம் appeared first on Dinakaran.

Tags : Iranial ,Shekhar ,Nullivilai ,Nullivilai Sahay Mata Kurusadi ,Thottiyot… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...