- குரும்பனை
- விஜயவாசாந்த்
- Kulachal
- குரும்பனை மீனவர் கிராமம்
- சைமன் காலனி பஞ்சாயத்து
- குரும்பனை ஊராட்சி ஒன்றியம்
- குரும்பனை பஞ்சாயத்து…
குளச்சல், ஜூலை 21 : குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் சைமன்காலனி ஊராட்சி குறும்பனை மீனவர் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாடு நிதி ரூ.7.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்கு திறப்பு விழா நடந்தது.
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் எனல்ராஜ் தலைமையில் விஜய் வசந்த் எம்.பி.திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரின்ஸ் எம்.எல்.ஏ, அகில இந்திய காங். கமிட்டி உறுப்பினர் ஆரோக்கியராஜன், குறும்பனை காங். நிர்வாகிகள் மணி, ராபின், சுரேஷ், வால்டர் ஜெகன், சுபாஷ், ரமேஷ், சுபிசன் உள்பட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post குறும்பனையில் ரூ.7.5 லட்சம் மதிப்பீட்டில் உயர் கோபுர மின் விளக்கு: விஜய் வசந்த் எம்.பி. திறந்து வைத்தார் appeared first on Dinakaran.
