×

புதுச்சேரி திருக்காஞ்சி கோயிலை சுற்றி வலம் வரும் கருப்பு பெண் நாய்

 

புதுச்சேரி, ஜூலை 21: புதுச்சேரி திருக்காஞ்சி கோயிலை சுற்றி வரும் கருப்பு பெண் நாயை பைரவி என பெயரிட்டு பொதுமக்கள் வணங்கி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையோரம் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. காசிக்கு நிகரான கோயிலாக கருதப்படும் இக்கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

அதேபோல், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளும் இக்கோயிலுக்கு வருகின்றனர். இந்நிலையில் இக்கோயிலில் கடந்த அஷ்டமி நாள் முதல் ஒரு கருப்புநிற பெண் நாய் உள் மற்றும் வெளிபிரகாரத்தில் வலம் வருகிறது. தினமும் குறைந்தபட்சம் 300 முறையாவது கோயிலை இது வலம் வருகிறது. அவ்வப்போது சிறிது நேரம் ஓய்வெடுத்து மீண்டும் வலம் வருகிறது.

இந்த நாய் பற்றி தகவல் பரவியதால், அதை பார்க்க சுற்றுப்புற கிராமங்களில் இருந்து மக்கள் வருகின்றனர். அதில் சிலர், அந்த நாய்க்கு உணவு அளிக்கின்றனர். நாய் வடிவில் சித்தர் தான் கோயிலை வலம் வருவதாக பக்தர்கள் நம்பி, அதற்கு பைரவி என பெயரிட்டு அழைத்து வணங்கவும் தொடங்கிவிட்டனர். இதுபற்றி கோயில் குருக்கள் கூறும்போது, கடந்த 21 நாட்களாக இதுபோல் பைரவி நாய் சுற்றி வருகிறது. ஏன் என தெரியவில்லை? என்றார்.

The post புதுச்சேரி திருக்காஞ்சி கோயிலை சுற்றி வலம் வரும் கருப்பு பெண் நாய் appeared first on Dinakaran.

Tags : Thirukanchi temple ,Puducherry ,Bhairavi ,Kashi Vishwanath ,Shankaraparani river ,Thirukanchi, Puducherry.… ,
× RELATED கல்லூரி மாணவி மாயம்