- புவனகிரி
- வில்லியம்ஸ்
- மணிக்கொல்லை
- புதுச்சத்திரம்
- ஜெகஜானந்தம்
- கீழ்பூவாணிகுப்பம் கிராமம்
- மணிசேகர்
- மணிக்கொல்லை கிராமம்
- தின மலர்
புவனகிரி, ஜூலை 21: புதுச்சத்திரம் அருகே உள்ள மணிக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் வில்லியம்ஸ்(37). இவர் கீழ்பூவாணிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகஜானந்தம் (37) மற்றும் மணிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த மணிசேகர் (35) ஆகிய இருவரிடம் வெளிநாட்டிற்கு செல்வதற்காக சுமார் ரூ.4 லட்சம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இருவரும் வில்லியம்சை வெளிநாட்டிற்கு அனுப்பாமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று வில்லியம்ஸ் இருவரையும் புதுச்சத்திரம் பஸ் நிலையம் அருகே சந்தித்துள்ளார். அப்போது இது குறித்து கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் வில்லியம்சை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வில்லியம்ஸ் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஜெகஜானந்தம், மணிசேகர் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வெளிநாட்டுக்கு அனுப்புவதாக மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது appeared first on Dinakaran.
