- திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை
- கலெக்டர்
- பிரதாப்
- திருவள்ளூர்
- மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
- திருவள்ளூர் மாவட்டம்
- மாவட்ட கலெக்டர்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரதாப் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜவேல், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது மாவட்ட கலெக்டர், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் குறித்தும், முடிக்கப்பட்ட மற்றும் நிலுவைப் பணிகளின் விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து, ஊரக வளர்ச்சி துறையில் சிறப்பாக பணியாற்றிய 15 அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் பிரதாப் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
The post திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் சிறப்பாக பணியாற்றிய 15அலுவலர்களுக்கு கேடயம், பாராட்டு சான்று: கலெக்டர் பிரதாப் வழங்கினார் appeared first on Dinakaran.
