×

ஒரத்தநாடு அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஒரத்தநாடு, ஜூலை 20: ஒரத்தநாடு அருகே பொய்யுண்டார்கோட்டையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் பொய்யுண்டாகோட்டை, பாச்சூர், ஆதனக்கோட்டை, கருக்காடிபட்டி ஆகிய ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தினை தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் திருவையாறு எம்எல்ஏ துரைசந்திரசேகரன் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராமச்சந்திரன், கே.டி.மகேஷ்கிருஷ்ணசாமி, ஒன்றிய செயலாளர் ரமேஷ்குமார் ,திட்ட இயக்குனர் ஊராட்சிகளின் உதவி இயக்குனர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், மாவட்ட ஒன்றிய சார்பு அணிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள், அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் சுமார் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

The post ஒரத்தநாடு அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் appeared first on Dinakaran.

Tags : Orathanadu ,With Stalin ,Poiyundarkottai ,Thanjavur district ,Bachur ,Athanakottai ,Karukadipatti ,Thanjavur Central District League ,Secretary… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...